செய்திகள்

வாள்​வீச்சு: பவானி தேவி ஏமாற்​றம்

மக​ளிர் தனி​ந​பர் சப்ரே பிரி​வில் கள​மி​றங்​கிய தமி​ழக வீராங்​கனை பவானி தேவி, குரூப் சுற்​றில் தன்னை எதிர்​கொண்ட 5 போட்டி​யா​ளர்​க​ளை​யுமே வென்​றார்.

DIN

மக​ளிர் தனி​ந​பர் சப்ரே பிரி​வில் கள​மி​றங்​கிய தமி​ழக வீராங்​கனை பவானி தேவி, குரூப் சுற்​றில் தன்னை எதிர்​கொண்ட 5 போட்டி​யா​ளர்​க​ளை​யுமே வென்​றார். முத​லில் சிங்​கப்​பூ​ரின் ஜூலியட் ஜி மின் ஹெங்​கை​யும் (5-2), அடுத்து சவூதி அரே​பி​யா​வின் அல்ஷ்னா அல்​ஹ​ம​தை​யும் (5-1) சாய்த்த பவானி தேவி, 3-ஆவது ஆட்டத்​தில் கரினா தோஸ்​பேவை (5-3) சாய்த்​தார். அடுத்த இரு மோதல்​க​ளில் உஸ்​பெ​கிஸ்​தா​னின் ஜேனாப் தயி​பெ​கோ​வா​வை​யும், வங்​க​தே​சத்​தின் ரோக்​சனா காட்டு​னை​யும் (5-1) வெற்றி கண்​டார். 
இத​னால் "பை' பெற்று காலி​று​திக்கு முந்​தைய சுற்​றுக்கு வந்த அவர், அதில் தாய்​லாந்​தின் டோங்​காவ் போகேவை வீழ்த்​தி​னார். எனி​னும் காலி​று​தி​யில் சீனா​வின் யாகி ஷாவி​டம் 7-15 என தோல்வி கண்டு போட்டி​யி​லி​ருந்து வெளி​யே​றி​னார். காலி​று​தி​யில் வெல்​லும் பட்சத்​தில் பவானி தேவிக்கு முதல் ஆசிய பதக்​கம் உறு​தி​யா​கி​யி​ருக்​கும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குட்டையில் மூழ்கி பள்ளி மாணவா்கள் 2 போ் உயிரிழப்பு

19.2.1976: வரதட்சிணை சட்டம் மீறினால் ஓராண்டு சிறைவாசம் கிட்டும்

பிரதமா் மோடி மார்ச் 1-இல் புதுச்சேரி வருகை! பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறாா்

2030-க்குள் அனைத்து கிராமங்களிலும் கூட்டுறவு நிறுவனம்: அமைச்சா் லட்சுமி நாராயணன் உறுதி

முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதி விபத்து: 10 போ் காயம்

SCROLL FOR NEXT