செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டி: ஸ்கேட்டிங்கில் தங்கம் வென்ற 13 வயது சிறுமி!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஸ்கேட்டிங்கில் தங்கப் பதக்கம் வென்று சீனாவைச் சேர்ந்த 13 வயது சிறுமி சாதனைப் படைத்துள்ளார்.

DIN

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஸ்கேட்டிங்கில் தங்கப் பதக்கம் வென்று சீனாவைச் சேர்ந்த 13 வயது சிறுமி சாதனைப் படைத்துள்ளார்.

19 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்ஸு நகரில் கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் தொடங்கின. இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில்  45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று குவித்து வருகின்றனர். பதக்கப்பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. 

இந்த நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஸ்கேட்டிங்கில் தங்கப் பதக்கம் வென்று சீனாவைச் சேர்ந்த குயி சென்ஷி என்ற 13 வயது சிறுமி இன்று (செப்டம்பர் 27) சாதனைப் படைத்துள்ளார். 

குயி சென்ஷி சீனா சார்பில் கலந்து கொள்ளும் மிகவும் இளம் பங்கேற்பாளர் ஆவார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சக சீன வீராங்கனையை வீழ்த்தி ஸ்கேட்டிங் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளவும் அவர் தகுதி பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT