செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 6-வது தங்கம்!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 6-வது தங்கத்தை வென்றுள்ளது இந்தியா. 

DIN

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 6-வது தங்கத்தை வென்றுள்ளது இந்தியா. 

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. 

1,734 புள்ளிகளுடன் அர்ஜூன் சீமா, சரப்ஜோத் சிங், ஷிவா நர்வா ஆகியோர் அடங்கிய இந்திய அணி, சீனாவை ஒரு புள்ளியில் தோற்கடித்து தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. துப்பாக்கிச் சுடுதலில் இது 4-வது தங்கம். 

துப்பாக்கிச் சுடுதலில் மட்டும் இதுவரை 4 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் வென்றுள்ளது இந்தியா. 

அதேபோல வுஷு சண்டா போட்டியில் பெண்களுக்கான 60 கிலோ பிரிவில் ரோஷிபினா தேவி இன்று வெள்ளி வென்றார். 

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை 6 தங்கம் உள்ளிட்ட 24 பதக்கங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவரைப்பேட்டையில் ரயில் விபத்துக்கு நாசவேலைதான் காரணம்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா மறுப்பு! நேரடியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது பாக்.!

கவின் பெற்றோருக்கு கே.என். நேரு, கனிமொழி நேரில் ஆறுதல்!

பாகிஸ்தானிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் நிலை வரலாம்! டிரம்ப்

கவின் ஆணவக் கொலை: காவல் உதவி ஆய்வாளர் கைது!

SCROLL FOR NEXT