செய்திகள்

அவர் அப்படியா கூறினார்?: ஆச்சர்யப்பட்ட ஹர்மன்ப்ரீத் கெளர்!

DIN

டி20 உலகக் கோப்பையில், தான் ரன் அவுட் ஆன விதம் பற்றி இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் பதில் அளித்துள்ளார்.

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது. அத்துடன், முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெற்றது ஆஸ்திரேலியா. இந்த ஆட்டத்தில் முதலில் ஆஸ்திரேலியா 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுக்க, இந்தியா 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களையே எட்டியது. 

கடந்த உலகக் கோப்பை போட்டியில் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்தியா, தற்போது அரையிறுதியிலேயே அதே அணியிடம் வீழ்ந்து வெளியேறியிருக்கிறது. இதனால், உலகக் கோப்பையை வெல்லும் இந்தியாவின் கனவு, இன்னும் கனவாகவே நீடிக்கும் நிலைக்குச் சென்றது.

இந்திய அணி நடுவரிசை பேட்டர்களான ஹர்மன்ப்ரீத் சிங்கும் ஜெமிமாவும் நன்கு விளையாடி வெற்றிக்கு அருகில் சென்றார்கள். எனினும் ஜெமிமா 43 ரன்களிலும் ஹர்மன்ப்ரீத் கெளர் 52 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டுக் கடைசியில் இந்திய அணி தோற்றது. அதிலும் ஹர்மன்ப்ரீத் கெளர் எதிர்பாராத விதத்தில் ரன் அவுட் ஆனார். 2-வது ரன் ஓடி வரும்போது பேட் ஆடுகளத்தில் இடறியதால் அவரால் கிரீஸைத் தொட முடியாமல் போனது. அவருடைய இந்தத் தவறை, பள்ளி மாணவி செய்யும் தவறு என இங்கிலாந்து முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் விமர்சனம் செய்திருந்தார். இதுபற்றி ஹர்மன்ப்ரீத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் கூறியதாவது:

அவர் அப்படியா கூறினார்? ஆட்டம் முடிந்த பிறகா? ஒருவேளை அவர் எப்படி எண்ணலாம். சில நேரங்களில் இப்படி அமையும். இதைப் போன்று பலமுறை பார்த்துள்ளேன். பேட்டர்கள் ரன்கள் எடுக்கப் பார்க்கும்போது சிலசமயம் பேட்டை முன்னே கொண்டு செல்ல முடியாதபடி பேட் தரையில் மாட்டிக் கொண்டு விடும். எங்களுக்கு இன்று அதிர்ஷ்டம் இல்லை. எல்லாத் துறைகளிலும் நன்கு விளையாடினால் தான் இறுதிச்சுற்றுக்குச் செல்ல முடியும். ஆனால் ஒரு பள்ளி மாணவியின் தவறல்ல இது. எங்களுக்குப் பக்குவம் உண்டு. நாங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுகிறோம். அவர் என்ன சொன்னாலும் அவர் தான் அப்படி நினைத்துள்ளார். ஆனால் அவர் சொன்னது போல நடக்கவில்லை என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா - எகிப்து எல்லையை இஸ்ரேல் ராணுவம் முழுமையாகக் கைப்பற்றியது

கருத்துக் கணிப்பு வெளியிட்ட தொலைக்காட்சி: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

இருளுக்கு எதிராகப் போராடும் வலிமை கொடுத்தவர் மகாத்மா: ராகுல் காந்தி

பட்டதாரிகளுக்கு ராணுவ அதிகாரிப் பணி: காலியிடங்கள் 459

ஜூன் 3-இல் ஒரே நோ்க்கோட்டில் 6 கோள்கள்: வெறும் கண்களால் காண முடியும்!

SCROLL FOR NEXT