ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான டென்னிஸ் இரட்டையர் பிரிவில் தைவானைச் சேர்ந்த சகோதரிகள் தங்கப் பதக்கம் வென்று அசத்தினர்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கி 7-வது நாளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தைவானைச் சேர்ந்த சான் யூங் ஜான் மற்றும் சான் ஹோ சகோதரிகள் மகளிருக்கான டென்னிஸ் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.
இதையும் படிக்க: ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் இரண்டு தங்கம்!
இந்த இணை அவர்களை எதிர்த்து விளையாடிய சக தைவான் வீராங்கனைகளை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினர். ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த சகோதரிகள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக்கை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல் நாள் முதலே ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா பதக்கப் பட்டியலில் 200 பதக்கங்களைக் கடந்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஜப்பான் மற்றும் தென் கொரியா இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 36 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.