பென் ஸ்டோக்ஸ் 
செய்திகள்

பென் ஸ்டோக்ஸின் முடிவு சரியானது: இங்கிலாந்து முன்னாள் வீரர்

டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ள பென் ஸ்டோக்ஸை ஆதரித்து ஸ்டுவர்ட் பிராட் பேசியுள்ளார்.

DIN

டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ள பென் ஸ்டோக்ஸை ஆதரித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் பிராட் பேசியுள்ளார்.

உடல்தகுதியை மேம்படுத்துவதன் காரணமாக எதிர்வரும் டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் பென் ஸ்டோக்ஸ் அண்மையில் அறிவித்தார்.

இந்த நிலையில், பென் ஸ்டோக்ஸின் முடிவை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் பிராட் ஆதரித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஸ்டுவர்ட் பிராட்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பென் ஸ்டோக்ஸ் அவரது நலனுக்காக என்ன முடிவு எடுத்தாலும், அது சரியான முடிவாகவே இருக்கும். அவரது கிரிக்கெட் பயணத்தில் மேற்கொண்ட நம்பமுடியாத சில முடிவுகள் அவருக்கு பலனளித்துள்ளது. அவர் மீண்டும் ஆல்ரவுண்டராக சிறப்பாக செயல்பட வேண்டும் என நினைக்கிறார். இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடினால், உடல் தகுதியில் கவனம் செலுத்துவது கடினம் எனத் தெரிந்ததால் உலகக் கோப்பையிலிருந்து விலகியுள்ளார். அவரது இந்த முடிவு சிறப்பான தெரிவே என்றார்.

உலகக் கோப்பைத் தொடர் ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி கிணற்றில் மாணவா் சடலமாக மீட்பு!

லாரி கவிழ்ந்ததில் இருவா் படுகாயம்

காட்டெருமையைத் துரத்தி விளையாடிய யானைக் குட்டி

வனத் துறையினா் வாகனத்தை துரத்திய யானை

ஆற்காட்டில் 6 பசுமாடுகள திருடி சென்ற நபா் கைது

SCROLL FOR NEXT