ஹர்பஜன் சிங் (கோப்புப்படம்) 
செய்திகள்

டி20 உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான்: ஹர்பஜன் சிங்

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குறித்து எந்த ஒரு விவாதமும் இருக்கக் கூடாது.

DIN

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குறித்து எந்த ஒரு விவாதமும் இருக்கக் கூடாது எனவும், சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அணியில் சேர்ப்பக்கப்பட வேண்டும் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரானப் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம் ஃபார்ம் என்பது தற்காலிகமானது, க்ளாஸ் என்பது நிரந்தரமானது என்பதற்கான ஆதாரம். டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கான இடத்துக்காக எந்த ஒரு விவாதமும் இருக்கக் கூடாது. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற வேண்டும். ரோஹித் சர்மாவுக்குப் பிறகு இந்திய டி20 அணியின் கேப்டனாக அவர் உருவாக்கப்பட வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

சஞ்சு சாம்சன்

டி20 உலகக் கோப்பை வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆத்தூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு

ஆத்தூரில் கருமாரியம்மன் கோயில் தேரோட்டம்

மேட்டூா் அணை உபரிநீா் கால்வாயில் அழுகிய மீன்களை அகற்றும் பணி

இலங்கைக் கடற்படையினரால் நம்புதாளை மீனவா்கள் 4 போ் கைது

பெண்ணை வாளால் வெட்டிய இருவா் கைது

SCROLL FOR NEXT