சௌரவ் கங்குலி  படம் | ஐபிஎல்
செய்திகள்

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இரண்டு முக்கியமான வீரர்கள் இடம்பெற வேண்டும் என சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

DIN

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இரண்டு முக்கியமான வீரர்கள் இடம்பெற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ இந்த வாரம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் மற்றும் அக்‌ஷர் படேல் இருவரும் சேர்க்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் மற்றும் அக்‌ஷர் படேல் சேர்க்கப்பட வேண்டும். உலகக் கோப்பை டி20 தொடரில் 8-வது இடத்தில் களமிறங்கி அணிக்காக 15-20 ரன்கள் சேர்க்கும் திறன் கொண்ட ஒருவர் அணிக்கு தேவைப்படும் என ரோஹித் சர்மா நினைப்பார். அந்த வேலையை அக்‌ஷர் படேல் எளிதில் செய்து முடிக்கக் கூடியவர். சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சிக்ஸருக்கு விளாச அக்‌ஷர் மற்றும் ரவீந்திர ஜடேஜாவால் முடியும். அவர்கள் இருவரும் மிகவும் திறமைசாலிகள்.

எனக்கு ரிஷப் பந்த் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரையும் மிகவும் பிடிக்கும். ரிஷப் பந்த் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பிடிப்பார். சஞ்சு சாம்சனும் அணியில் இடம்பிடிக்கலாம். அவர் அணியில் இடம்பெறக் கூடாது என நான் கூறவில்லை. மற்ற வீரர்களைப் போல அவரும் மிகச் சிறந்த வீரர். அவர் கீப்பிங் செய்கிறார், பேட்டிங் செய்கிறார், ராஜஸ்தான் ராயல்ஸை கேப்டனாக வழிநடத்துகிறார். இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவர்கள் நினைத்தால் ரிஷப் பந்த் மற்றும் சஞ்சு சாம்சன் இருவருமே அணியில் இடம்பிடிக்கலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT