எம்.எஸ்.தோனி 
செய்திகள்

எனக்கு பிடித்த பந்துவீச்சாளர் இவர்தான்; மனம் திறந்த எம்.எஸ்.தோனி!

தனக்கு பிடித்தமான பந்துவீச்சாளர் யார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார்.

DIN

தனக்கு பிடித்தமான பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார்.

அண்மையில் நிறைவடைந்த டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றுவதற்கு ஜஸ்பிரித் பும்ரா மிக முக்கிய பங்காற்றினார். 8 போட்டிகளில் விளையாடிய அவர் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவரது சிறப்பான செயல்பாடுகள் அவருக்கு டி20 உலகக் கோப்பைத் தொடரின் தொடர் நாயகன் விருதினை பெற்றுத் தந்தது.

இந்த நிலையில், தனக்கு பிடித்தமான பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார்.

விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எம்.எஸ்.தோனி இது குறித்து பேசியதாவது: எனக்கு பிடித்தமான பந்துவீச்சாளரை தேர்ந்தெடுப்பது மிகவும் எளிது. ஏனென்றால், அந்த இடத்தில் பும்ரா இருக்கிறார். ஆனால், பிடித்த பேட்ஸ்மேன்களை தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம். ஏனெனில், நம்மிடம் நிறைய சிறந்த பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். சிறந்த பேட்ஸ்மேன்கள் நிறைய இருக்கிறார்கள் எனக் கூறுவதால், சிறந்த பந்துவீச்சாளர்கள் இல்லை என்பது பொருள் கிடையாது.

ஜஸ்பிரித் பும்ரா

அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவது குறித்து சிந்திக்க அதிக நேரம் இருக்கிறது. வீரர்களை தக்க வைப்பதில் என்ன மாதிரியான விதியினை கொண்டுவரப் போகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். அதனால், தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடும் முடிவு நமது கைகளில் இல்லை. புதிய விதிகள் வந்தபிறகு, அணியின் நலன் கருதி எனது முடிவை அறிவிப்பேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

நான் திமுகவின் பி டீமா? பன்னீர் செல்வம் விளக்கம்!

செத்த பொருளாதாரம்: அவமரியாதையே தவிர அர்த்தம் கொள்ளக் கூடாது: சசி தரூர்!

கோபி, சுதாகர் படத்தின் போஸ்டர் வெளியீடு!

நான் அழுதுவிடுவேன் என பயம் வந்துவிட்டது!: Kamal Hassan | Agaram foundation

SCROLL FOR NEXT