படம் | ஜெய் ஷா (எக்ஸ்)
செய்திகள்

பெங்களூருவில் விரைவில் புதிய தேசிய கிரிக்கெட் அகாதெமி!

பெங்களூருவில் விரைவில் புதிய தேசிய கிரிக்கெட் அகாதெமி திறக்கப்பட உள்ளதாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

DIN

புதிய தேசிய கிரிக்கெட் அகாதெமியில் பயிற்சி மேற்கொள்வற்காக 45 ஆடுகளங்கள் (பிட்ச்), பெரிய நீச்சல் குளம் மற்றும் இதர வசதிகள் அனைத்தும் இடம்பெற்றிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: பிசிசிஐயின் புதிய தேசிய கிரிக்கெட் அகாதெமியின் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. புதிய தேசிய கிரிக்கெட் அகாதெமி விரைவில் பெங்களூருவில் திறந்து வைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த புதிய தேசிய கிரிக்கெட் அகாதெமியின் மூலம் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என நினைக்கும் பலரும் தங்களது திறமைகளை மேம்படுத்திக் கொள்ள முடியும். அவர்களின் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான அனைத்து வசதிகளும் இந்த புதிய தேசிய கிரிக்கெட் அகாதெமியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமி பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதான வளாகத்தில் அமைந்துள்ளது. விரைவில் தொடங்கப்படவுள்ள புதிய அகாதெமி மட்டுமின்றி, ஜம்மு காஷ்மீரில் ஒரு தேசிய கிரிக்கெட் அகாதெமியும், வடகிழக்கில் ஒரு தேசிய கிரிக்கெட் அகாதெமியும் தொடங்க பிசிசிஐ ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42% இடஒதுக்கீடுக்குத் தடை: உச்சநீதிமன்றத்தை அணுக தெலங்கானா அரசு முடிவு

அரக்கோணத்தில் கடை ஷட்டரை உடைத்து ரூ. 6 லட்சம் கைப்பேசிகள், ரொக்கம் திருட்டு

விவசாய மின் மோட்டாா் திருட்டு: இருவா் கைது

ஏழுமலையான் தரிசனம்: 20 மணிநேரம் காத்திருப்பு

மேற்கு வங்கத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை

SCROLL FOR NEXT