வங்கதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்கள் படம் | AP
செய்திகள்

வங்கதேசத்தில் டி20 உலகக் கோப்பை நடைபெறுமா?

வங்கதேசத்தில் வன்முறை வெடித்து ராணுவ ஆட்சி அமைந்துள்ளதால் அங்கு டி20 உலகக் கோப்பை நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

DIN

வங்கதேசத்தில் வன்முறை வெடித்து ராணுவ ஆட்சி அமைந்துள்ளதால் அங்கு டி20 உலகக் கோப்பை நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வங்கதேசத்தில் வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றுள்ளது. வன்முறை அதிகரித்ததைத் தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா அவரது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்து வங்கதேசத்தை விட்டு வெளியேறினார். இதனையடுத்து, வங்கதேசம் ராணுவ ஆட்சியின் கீழ் வந்துள்ளது.

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் வருகிற அக்டோபர் மாதத்தில் வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது. மகளிர் உலகக் கோப்பைத் தொடர் அக்டோபர் 3 முதல் தொடங்கி அக்டோபர் 20 வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், வங்கதேசத்தில் வன்முறை வெடித்து ராணுவ ஆட்சி அமைந்துள்ளதால் அங்கு டி20 உலகக் கோப்பை நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வங்கதேசத்தில் பாதுகாப்பு நிலையை கவனித்து வருவதாக ஐசிசி தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஐசிசி தரப்பில், வங்கதேசத்தை தொடர்ந்து கவனித்து வருவதாக மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் இன்னும் 7 வாரங்களில் தொடங்கவுள்ளது. இரண்டு மாதங்களுக்கும் குறைவாகவே நாள்கள் இருக்கின்றன. வங்கதேசத்தில் வன்முறை குறைந்து இயல்பு நிலை திரும்பினால், அங்கு டி20 உலகக் கோப்பை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வன்முறை நீடிக்கும் பட்சத்தில், டி20 உலகக் கோப்பைத் தொடர் வேறு நாட்டுக்கு மாற்றப்படலாம் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ரூ. 87 ஆயிரத்தைக் கடந்தது! 3 நாள்களில் ரூ. 2,000 உயர்வு!

முதியவா்களுக்கு எதிரான குற்றங்கள்: தமிழகம் 4-ஆவது இடம்!

பாடகர் ஸுபீன் கர்கின் மேலாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது!

வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு!

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 27 பேர் பலி!

SCROLL FOR NEXT