இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது குறித்து இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா மனம் திறந்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று (ஆகஸ்ட் 7) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இலங்கை அணி இந்தியாவை 110 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி அதன் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் தொடரை வென்று அசத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது குறித்து இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா மனம் திறந்துள்ளார்.
ஒருநாள் தொடரை வென்ற பிறகு இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா பேசியதாவது: நான் மிகவும் மகிழ்ச்சியான கேப்டனாக உணர்கிறேன். இந்தியாவுக்கு எதிரான இந்த ஒருநாள் தொடர் முழுவதுமே இலங்கை அணி அனைத்து விஷயங்களையும் சரியாக செய்தது. இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகவும் வலிமையானது என எங்களுக்குத் தெரியும். எங்களது பலத்தில் கவனம் செலுத்த விரும்பினோம்.
சுழற்பந்துவீச்சு எங்களது பலம். இந்திய அணிக்கு எதிராக சுழற்பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம். இலங்கை அணி வீரர்கள் இந்த வெற்றிக்கு பிறகு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அணியின் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். இலங்கை அணியில் நிலவும் சூழல் வீரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.