படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
செய்திகள்

முதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்க அணி 344 ரன்கள் குவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்கள் எடுத்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்று வருகிறது. தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. முதல்நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட அன்றைய நாளுக்கான ஓவர்கள் முழுமையாக வீசப்படவில்லை.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் டெம்பா பவுமா 86 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, டோனி டி ஸார்ஸி 78 ரன்கள் எடுத்தார். கைல் வெரைன் 39 ரன்களும், வியான் முல்டர் 37 ரன்களும் எடுத்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜோமல் வாரிக்கேன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கீமர் ரோச் மற்றும் ஜேடன் சீல்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும், ஜேசன் ஹோல்டர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பராசக்தியில் நடித்தது வாழ்நாள் பெருமை: சிவகார்த்திகேயன்

ஈரான் - அமெரிக்கா மோதலால் வளைகுடா நாடுகளுக்கு தீவிர பாதிப்பு - கத்தார் எச்சரிக்கை!

“ஜல்லிக்கட்டுனா.. எங்க ஊரு கயிறுதான்!” விறுவிறுப்பாக நடைபெறும் மூக்கணாங்கயிறு விற்பனை!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.90.21ஆக நிறைவு!

மன அழுத்தம்... உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கிறதா?

SCROLL FOR NEXT