கபடியை பிரபலப்படுத்தும் விதமாக உலக மகளிர் கபடி தொடர் முதல் முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ளது.
உலக மகளிர் கபடி தொடர் அடுத்த மாதம் இந்தியாவில் நடத்தப்படவுள்ளது. கபடிக்காக உலக அளவில் ஒரு தொடர் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த கபடி தொடரில் உலகின் 15 நாடுகளிலிருந்தும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடவுள்ளனர்.
உலக அரங்கில் கபடியை பிரபலப்படுத்துவதுடன் ஒலிம்பிக் போட்டிகளில் கபடியை சேர்க்கும் நோக்கத்துடனும் இந்த தொடர் நடத்தப்பட உள்ளது. மேலும், 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது. 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா நடத்தும் பட்சத்தில், ஒலிம்பிக்கில் கபடியை சேர்ப்பது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் முறையிடுவதற்கு இந்த உலக மகளிர் கபடி தொடர் உதவியாக இருக்கும்.
உலக மகளிர் கபடி தொடர் ஹரியாணாவில் நடத்தப்படவுள்ளது. உலக கபடி அமைப்பு மற்றும் ஹரியாணா அரசு இணைந்து இந்த கபடி தொடரை நடத்த திட்டமிட்டுள்ளன. இங்கிலாந்து, போலாந்து, ஆர்ஜென்டீனா, கனடா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் இந்த கபடி தொடரில் பங்கேற்ப விருப்பம் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.