அமெரிக்காவில் நடைபெற்றுவரும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் விம்பிள்டன் சாம்பியன் கார்லோஸ் அல்கராஸ் பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸ் உடன் மோதினார்.
இந்தப் போட்டியில் முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய அல்கராஸ் அடுத்த 2 செட்டுகளிலும் தோல்வியுற்றார்.
பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸ் இந்தப் போட்டியில் 4-6, 7-6 (5), 6-4 என்ற செட்களில் அல்கராஸை வீழ்த்தி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றார். பின்னர் அதில் தோற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெளியேறினார்.
இந்தப் போட்டியில் தோல்வியுற்ற அல்கராஸ் அதனை தாங்கிக்கொள்ள முடியாமல் டென்னிஸ் ராக்கெட்டை (பந்தாட்ட மட்டை) மைதானத்திலேயே பல முறை ஓங்கி அடித்து உடைத்தார். இது பார்வையாளர்கள் மத்தியில் அதிர்சியை ஏற்படுத்தியது.
சமூக வலைதளங்களில் இது குறித்து விமர்சனங்களும் எழுந்துள்ளன. விம்பிள்டனில் வென்ற அல்கராஸ் ஒலிம்பிக்கில் ஜோகோவிச்சிடம் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.