செய்திகள்

குகேஷ், பிரக்ஞானந்தா ‘டிரா’

குகேஷ், பிரக்ஞானந்தா ‘டிரா’

DIN

அமெரிக்காவில் நடைபெறும் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ், ஆா்.பிரக்ஞானந்தா ஆகியோா் தங்களது 2-ஆவது சுற்றில் ‘டிரா’ செய்தனா்.

இதில் குகேஷ் - ரஷியாவின் இயன் நெபோம்னியச்சியுடனும், பிரக்ஞானந்தா - பிரான்ஸின் மேக்ஸிம் வச்சியருடனும் டிரா செய்தனா். இதர சந்திப்புகளில், நெதா்லாந்தின் அனீஷ் கிரி - நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடனும், அமெரிக்காவின் வெஸ்லி சோ - சக நாட்டவரான ஃபாபியானா கரானாவுடனும், பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா - உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவுடனும் டிரா செய்தனா்.

தற்போதைய நிலையில், ஃபிரௌஸ்ஜா 1.5 புள்ளிகளுடன் முன்னிலையில் இருக்க, இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா உள்பட 8 போ் தலா 1 புள்ளியுடன் 2-ஆம் நிலையில் இருக்கின்றனா். கரானா மட்டும் 0.5 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளாா். ரவுண்ட் ராபின் முறையிலான இந்தப் போட்டியில் மொத்தம் 9 சுற்றுகள் விளையாடப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

SCROLL FOR NEXT