ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கெளர்  AFP
செய்திகள்

மகளிர் டி20 உலகக் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு

ஹர்மன்ப்ரீத் கெளர் தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு.

DIN

மகளிர் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

ஹர்மன்ப்ரீத் கெளர் தலைமையிலான அணியில் ஸ்மிருதி மந்தனா (துணைக் கேப்டன்), ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (கீப்பர்), யாஸ்திகா பாட்டியா (கீப்பர்), பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்குர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டில் மற்றும் சஞ்சனா சஜீவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ரிசர்வ் வீராங்கனைகளாக அணியுடன் உமா சீத்ரி (கீப்பர்), தனுஜ் கன்வர், சாய்வில் தாகோர் ஆகியோர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்லவுள்ளனர்.

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா, துபை நகரங்களில் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கின்றன.

உலகக் கோப்பை போட்டிகள் முதலில் வங்கதேசத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. அங்கு நிலவும் அரசியல் அமைதியின்மை காரணமாக பல வீரர்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்ததை அடுத்து, போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.

துபை மற்றும் ஷார்ஜா ஆகிய இரண்டு மைதானங்களில் மட்டுமே மொத்தம் 23 போட்டிகள் நடைபெறவுள்ளன.

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் ஏ பிரிவிலும், பி பிரிவில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன.

அக்டோபர் 20 ஆம் தேதி துபையில் நடக்கும் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT