டேவிட் மலான் x
செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டேவிட் மலான் ஓய்வு!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்து பேட்டர் டேவிட் மலானின் ஓய்வு பற்றி..

DIN

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து பேட்டர் டேவிட் மலான் புதன்கிழமை அறிவித்துள்ளார்.

36 வயதாகும் டேவிட் மலான், மூன்று விதமான சர்வதேச போட்டிகளிலும் சதமடித்த இங்கிலாந்து பேட்டர் ஆவார். அதிவேகமாக 1,000 ரன்களை(24 போட்டிகள்) கடந்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக 22 டெஸ்ட் போட்டிகள், 30 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 62 டி20 போட்டிகளில் மலான் விளையாடியுள்ளார். 2020ஆம் ஆண்டில் சர்வதேச டி20 பேட்டர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார் மலான்.

மேலும், ஐசிசி உலகக் கோப்பை 2022-ஐ வென்ற இங்கிலாந்து அணியின் முக்கிய பேட்டராக மலான் இருந்தார்.

இந்த நிலையில், கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு, இங்கிலாந்து அணிக்காக எவ்வித போட்டியிலும் விளையாடாமல் இருந்தார் மலான்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியிலும் மலான் பெயர் இடம்பெறாமல் இருந்தது.

இந்த நிலையில், மூன்று விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக புதன்கிழமை மலான் அறிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரை பொறுத்தவரை பஞ்சாப் அணிக்காக 2021ஆம் ஆண்டு ஒரே ஒரு போட்டியில் மட்டும் மலான் விளையாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.12 லட்சத்தில் தனக்குத் தானே கல்லறை கட்டிய முதியவர் மரணம்!

மீண்டும் வெற்றிப்படம் கொடுத்த பகவந்த் கேசரி இயக்குநர்!

பிக் பாஸ் வீட்டில் துஷார்! காதல் பாடலைப் பாடி உற்சாகப்படுத்திய போட்டியாளர்கள்!

சர்வதேச காற்றாடித் திருவிழா! பட்டம் விட்டு மகிழ்ந்த பிரதமர் மோடி!

இயக்குநராகும் ஜித்து மாதவன் மனைவி!

SCROLL FOR NEXT