சிங்க்ஃபீல்டு கோப்பையை வென்றார் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா படம்: கிராண்ட் செஸ் டூர் /எக்ஸ்
செய்திகள்

சிங்க்ஃபீல்டு கோப்பையை வென்றார் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா! பிரக்ஞானந்தாவுக்கு பரிசுத்தொகை எவ்வளவு?

கிராண்ட் செஸ் டூரின் சிங்க்ஃபீல்டு கோப்பையை வென்றார் பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா.

DIN

கிராண்ட் செஸ் டூரின் ஒரு பகுதியாக நடைபெறும் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் கோப்பியை வென்றார் பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா.

அமெரிக்காவில் நடைபெற்று வந்த இந்தப் போட்டியின் கடைசி சுற்றில் பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா பிரக்ஞானந்தாவுடன் மோதினார். இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தது. மற்றுமொரு இந்தியரான குகேஷும் டிரா செய்தார்.

இறுதியாக புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார் பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா.

அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா 5.5 புள்ளிகளுடன் 2ஆம் இடம் பிடித்தார். 4ஆம் இடத்தை பிரக்ஞானந்தா, குகேஷ், வெஸ்லி சோ ஆகியோர் பகிர்ந்துகொண்டனர்.

முதலிடம் பிடித்த அலிரெஸா ஃபிரௌஸ்ஜாவுக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.83 லட்சம்) பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

இந்தியர்களான பிரக்ஞானந்தா, குகேஷுக்கு தலா ரூ.18 லட்சம் பரிசுத் தொகையாக கொடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வானவில்லின் அழகு - பிரீத்தி முகுந்தன்

மேகம் போல கலையும் உடல்

2-வது டெஸ்ட்: ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய மே.இ.தீவுகள் வீரர்கள்!

இரவில் பெண்கள் வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது: மமதா சர்ச்சைப் பேச்சு!

கலிஃபோர்னியாவில் மீண்டும் ஹெலிகாப்டர் விபத்து: பயணிகளின் கதி?

SCROLL FOR NEXT