பதக்கங்களுடன் சச்சின் டெண்டுல்கரை சந்தித்த மனு பாக்கர் படம் | மனு பாக்கர் (எக்ஸ்)
செய்திகள்

சச்சின் டெண்டுல்கரை சந்தித்த மனு பாக்கர்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரை துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் நேரில் சந்தித்துள்ளார்.

DIN

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரை துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் நேரில் சந்தித்துள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு என துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினார் மனு பாக்கர். மேலும், ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரை துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் நேரில் சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக மனு பாக்கர் அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: மிகச் சிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. அவரது பயணம் எனக்கும், என்னைப் போன்று இலக்கினை நோக்கி பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் மிகப் பெரிய உந்து சக்தியாக இருக்கிறது. மறக்க முடியாத நினைவுகளை கொடுத்தற்கு நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.

மனு பாக்கருக்கு பதிலளித்து சச்சின் டெண்டுல்கர் பதிவிட்டிருப்பதாவது: உங்களையும், உங்களது குடும்பத்தினரையும் சந்தித்தது உண்மையில் சிறப்பான தருணமாக இருந்தது. பெரிய இலக்குகளை நோக்கி பல கனவுகளுடன் முன்னேறும் இளம் பெண்களுக்கு உங்களது வெற்றிக் கதை உந்து சக்தியாக உள்ளது. இந்தியாவுக்காக நீங்கள் மேலும் பல்வேறு சாதனைகளைப் படைக்க வேண்டும். இந்தியா உங்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தும் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தியின் வாக்குரிமைப் பேரணியின் இறுதி நாள்! 12 லட்சம் பேர் பங்கேற்ப்பு!

பாய்ச்சல்... பாயல் ராதாகிருஷ்ணா!

தமிழகத்தில் மூளை தின்னும் அமீபா பரவல் இல்லை: மா. சுப்பிரமணியன்

கட்டா குஸ்தி 2 அறிவிப்பு விடியோ!

சுசுகி இந்தியா விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 9% அதிகரிப்பு!

SCROLL FOR NEXT