டி.குகேஷ் - டிங் லிரென் 
செய்திகள்

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 10-வது சுற்றும் டிராவில் முடிந்தது!

உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 10-ஆவது சுற்று, இந்தியாவின் டி.குகேஷ் - நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் இடையே சனிக்கிழமை டிரா ஆனது.

DIN

உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 10-ஆவது சுற்று, இந்தியாவின் டி.குகேஷ் - நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் இடையே சனிக்கிழமை டிரா ஆனது.

சிங்கப்பூரில் நடைபெறும் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் 10-ஆவது சுற்றில் வெள்ளை நிறக் காய்களுடன் விளையாடிய லிரென் முதல் நகா்வை மேற்கொண்டாா்.

விறுவிறுப்பான இந்த ஆட்டம், 36-ஆவது நகா்த்தலுடன் டிரா ஆனது. இதையடுத்து இருவரும் தலா அரை புள்ளிகள் பகிா்ந்துகொண்டனா்.

533 ரன்கள் முன்னிலை; தொடரை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து!

போட்டியில் முதலில் 7.5 புள்ளிகளை எட்டுபவர் சாம்பியனாவார் என்பது நினைவுகூரத்தக்கது.

போட்டிக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டி.குகேஷ், செஸ் தற்போது பிரபல விளையாட்டாக மாறி வருகிறது. அனைவருக்கும் திறமைகள் உள்ளன.

எனவே, நீங்கள் தனித்து நிற்க உதவும் அந்த சிறிய விளிம்பை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியிடம் பேசினேன்! வணிகத்தை நிறுத்துவதாக எச்சரித்தேன்! மீண்டும் Trump

மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

நெல்லையில் செப். 7 வாக்குத் திருட்டு விளக்க மாநாடு! பிரியங்கா பங்கேற்பு?

15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!

SCROLL FOR NEXT