சௌதி அரேபியாவில் 2034 கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் அறிவிப்பு.  படம்: இன்சைடு ஃபிபா
செய்திகள்

சௌதி அரேபியாவில் 2034 கால்பந்து உலகக் கோப்பை..!

2034ஆம் ஆண்டுக்கான ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் சௌதி அரேபியாவில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

2034ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் சௌதி அரேபியாவிலும் 2030ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டிகள் தென் அமெரிக்காவிலும் நடைபெறுமென ஃபிபா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 2022 உலகக் கோப்பை கத்தாரில் நடைபெற்றது. அதில் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது, மீண்டும் வளைகுடா நாடுகள் பக்கம் திரும்பியுள்ளது. 2034ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை சௌதி அரேபியாவிலும் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடைபெறவிருக்கிறது. இதில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கின்றன.

சௌதி அரேபியா ஏற்கனவே, பார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் - ஜெட்டா, டபிள்யூடிஏ பைன்ல்ஸ் என பல முக்கியமான போட்டிகளை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2030 உலகக் கோப்பை

ஃபிபா 2030 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டிகள் பெரும்பாலும் மொராக்கோ, ஸ்பெயின், போர்ச்சுகள் நாடுகளிலும் தென் அமெரிக்க நாடுகளான ஆர்ஜென்டீனா, பாராகுவே, உருகுவே நாடுகளில் தலா ஒரு போட்டிகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விளையாட்டு... பவித்ரா லட்சுமி!

கருகரு கண்களால் கயல்விழி கொல்கிறாள்... பார்வதி!

திமுக கூட்டணியில் நிச்சயம் குழப்பம் இருக்கிறது! - Nainar Nagendran

கொல்கத்தாவில் பேருந்து மீது கார் மோதல்: காயமின்றி தப்பிய பிரபல நடிகர்

மரகதப் பச்சை... ரிங்கு ராஜ்குரு!

SCROLL FOR NEXT