உற்சாகத்தில் ரொனால்டோ.  படம்: எக்ஸ் / கிறிஸ்டியானோ ரொனால்டோ
செய்திகள்

2030 கால்பந்து உலகக் கோப்பை குறித்து ரொனால்டோ நெகிழ்ச்சி..!

2030ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளை போர்ச்சுகல் நடத்த அனுமதி கிடைத்தது குறித்து ரொனால்டோ மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

DIN

கால்பந்து உலகக் கோப்பை 2030ஆம் ஆண்டுக்கான போட்டிகளை போர்ச்சுகல் உள்பட 5 நாடுகள் நடத்த அனுமதி கிடைத்தது குறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

2034ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் சௌதி அரேபியாவிலும் 2030ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டிகள் 6 நாடுகளிலும் நடைபெறுமென ஃபிபா அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்தது.

உருகுவே 1930இல் முதல்முறையாக போட்டிகளை நடத்தி சாம்பியன் பட்டம் பெற்றது. தற்போது நூற்றாண்டை முன்னிட்டு உருகுவே நாட்டிலும் ஒரு போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ரொனால்டோ போர்ச்சுகல் ஜெர்ஸி அணிந்த் புகைப்படத்தை பகிர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:

கனவு நனவானது. 2030ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டிகளை போர்ச்சுகல் நடத்த அனுமதி வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. மிகவும் சிறப்பான உலகக் கோப்பையாக இருக்கும் என்றார்.

5 உலகக் கோப்பை தொடரில் கோல் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார். 2030 உலகக் கோப்பையில் அவர் விளையாடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

39 வயதாகும் ரொனால்டோ இதுவரை 900க்கும் அதிகமான கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சவரனுக்கு ரூ.800 குறைந்த தங்கம் விலை!

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்!

ஜல்லிக்கட்டு வா்ணனையாளா்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரிக்கை

10, 12 வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு! முழு விவரம்!

எனது தலைமையிலான அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை! தலைமை நீதிபதி

SCROLL FOR NEXT