டி. குகேஷ், மாக்னஸ் கார்ல்சென் கோப்புப் படங்கள்
செய்திகள்

குகேஷ் வெற்றிக்கு நம்.1 செஸ் வீரர் கார்ல்சென் கூறியதென்ன?

உலகின் நம்.1 செஸ் வீரர் மாக்னஸ் கார்ல்சென் குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

உலகின் நம்.1 செஸ் வீரர் மாக்னஸ் கார்ல்சென் குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் உலக சாம்பியன் டிங் லிரெனை 18 வயது இந்திய வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவில் ஏற்கனவே விஸ்வநாதன் ஆனந்த் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மாக்னஸ் கார்ல்சென் கூறியதாவது:

இது குகேஷின் நம்பமுடியாத சாதனை. முதலில் ஃபிடே சர்க்யூட்டில் சென்னையில் வென்றார். பின்னர், கேண்டிடேட் செஸ் தொடரில் வென்றார்.

குகேஷ் வெற்றிபெறுவாரென பலரும் நினைத்தார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக பல போட்டிகள் சமநிலையில் முடிந்தன. எதிர் தரப்பினரை கடைசிவரை நம்பிக்கைக் கொடுத்து திடீரென முடித்துவிட்டார்.

குகேஷ் முதலிடம் பிடிப்பார்

இந்த வெற்றி குகேஷுக்கு உத்வேகம் அளிக்கும். அநேகமாக தற்போது நம்.2 வீராராக மாறுவார். வருங்காலங்களில் முதலிடத்துக்கும் வருவார்.

நான் எப்போதும் பாதிப்பு குறைவான வெள்ளைநிற காய்களுடன் செல்வேன். டிங் லிரென் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்கலாம்.

இந்தியாவுக்கு பல வெற்றிகள் காத்திருக்கின்றன. குகேஷ் இந்த வெற்றியுடன் நிற்கப்போவதில்லை. குகேஷ் வென்ற தருணத்தைப் பார்க்கும்போது மிகவும் அழகாக இருந்தது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT