ஹெத்தை அம்மன் திருவிழாவையொட்டி அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் சமுதாய மக்கள் தங்களின் பாரம்பரிய திருவிழாவான "ஹெத்தை" அம்மன் திருவிழாவை இன்று வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். தங்கள் முன்னோர்களை நினைவுகூர்ந்து வழிபடும் இந்த திருவிழாவானது படுகர் இன மக்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், ஒற்றுமையையும் எடுத்துரைக்கிறது.
"ஹெத்தை' அம்மன் திருவிழாவிற்கு புரட்சித்தலைவி அம்மா உள்ளூர் விடுமுறை அளித்திருந்ததை நினைவு கூறும் இந்த வேளையில் ஹெத்தை அம்மனின் பூரண அருளால் தீமை அழிந்து, நன்மை பிறந்து, வளம் செழித்து மக்கள் யாவரும் இன்புற்று வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு சீமைகளில் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகா் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனா். இவா்கள், ஆண்டுதோறும் டிசம்பா், ஜனவரி மாதங்களில் ஹெத்தையம்மன் பண்டிகையை கொண்டாடுகின்றனா்.
இதற்காக 48 நாள்கள் விரதம் இருந்து தாய்வீடான கொதுமுடி கோயிலுக்கு பாரம்பரிய உடை மற்றும் செங்கோலுடன் நடைபயணம் மேற்கொண்டு அருள்வாக்கு கூறுவா்.
AIADMK General Secretary Edappadi Palaniswami has extended his greetings on the occasion of the Hethai Amman festival.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.