ரஜினிகாந்த், சிவகார்த்திகேயனிடம் வாழ்த்து பெற்ற குகேஷ்!
குகேஷை நேரில் சந்தித்து வாழ்த்திய ரஜினி, சிவகார்த்திகேயன்.
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷை நேரில் அழைத்து நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை 7.5 - 6.5 என்ற கணக்கில் வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றாா்.
இந்த சாம்பியன்ஷிப் வரலாற்றில், கோப்பை வென்ற மிக இளம் போட்டியாளா் (18) என்ற சாதனையை குகேஷ் படைத்திருக்கிறாா். மேலும், இந்தப் போட்டியில் வாகை சூடிய 2-ஆவது இந்தியா் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளாா்.
Advertisement
Advertisement
குகேஷுக்கு, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசில் தலைவா்களும், பல்துறை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குகேஷை தனது வீட்டுக்கு அழைத்து நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார். மேலும், குகேஷுக்கு பொன்னாடை போர்த்தி பரிசாக புத்தகம் வழங்கியுள்ளார்.
அதேபோல், நடிகர் சிவகார்த்திகேயனும் குகேஷை தனது வீட்டுக்கு அழைத்து வாழ்த்தியுள்ளார். குகேஷுடன் கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன், பரிசாக கைக்கடிகாரத்தை வழங்கினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.