செய்திகள்

2-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்  அறிவித்துள்ளது.

DIN

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்  அறிவித்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (பிப்ரவரி 2) முதல் விசாகப்பட்டினத்தில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்  அறிவித்துள்ளது. 

இங்கிலாந்து அணியில் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முழங்கால் காயம் காரணமாக ஜாக் லீச் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக சோயிப் பஷீர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மார்க் வுட்டுக்குப் பதிலாக ஜேம்ஸ் ஆண்டர்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி விவரம் (2-வது டெஸ்ட் போட்டிக்கு)

ஸாக் கிராலி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ், ரீஹன் அகமது, டாம் ஹார்ட்லி, சோயிப் பஷீர் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை கடும் சரிவு! சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது!

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்ட விஜய்! | TVK

பிஎஸ்எல்வி சி-62 பாதையைவிட்டு விலகியது! இஸ்ரோ

கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT