செய்திகள்

உலகக் கோப்பை நேரத்தில் தலைவலியை ஏற்படுத்திய ஷமர் ஜோசப்: மேற்கிந்தியத் தீவுகள் பயிற்சியாளர்

டி20 உலகக் கோப்பைக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியைத் தேர்வு செய்வதில் ஷமர் ஜோசப் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அணியின் பயிற்சியாளர் டேரன் சம்மி தெரிவித்துள்ளார். 

DIN

டி20 உலகக் கோப்பைக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியைத் தேர்வு செய்வதில் ஷமர் ஜோசப் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அணியின் பயிற்சியாளர் டேரன் சம்மி தெரிவித்துள்ளார். 

டி20 உலகக் கோப்பை வருகிற ஜூன் மாதத்தில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது. 50 ஓவர் உலகக் கோப்பை முடிவடைந்த சில மாதங்களிலேயே டி20 உலகக் கோப்பை தொடங்கவிருப்பதால் அனைத்து அணிகளும் கோப்பையை வெல்லும் முனைப்போடு தங்களை தயார்படுத்தி வருகின்றன. 

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியைத் தேர்வு செய்வதில் ஷமர் ஜோசப் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அணியின் பயிற்சியாளர் டேரன் சம்மி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஷமர் ஜோசப் அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான வீரர். டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடம்பிடிப்பதற்கான போட்டியாளராக அவர் உருவெடுத்திருக்கிறார். ஆனால், வீரர்களைத் தேர்வு செய்வதற்கு நடைமுறை இருக்கிறது. அதன்படியே நானும் கிரிக்கெட் வாரியத் தலைவர், தேர்வுக்குழு உறுப்பினர்களும் செயல்படுகின்றோம். டி20 உலகக் கோப்பை தொடங்கவுள்ள சமயத்தில் தனது அபார பந்துவீச்சுத் திறமையால் ஒரு சிறந்த தலைவலியை ஷமர் ஜோசப் உருவாக்கியுள்ளார் என்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 8  ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. அந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிக்கு ஷமர் ஜோசப் உதவியது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

மாா்ச் 1 முதல் அரக்கோணம் - திருப்பதி மெமு ரயில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம்

தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

பாலாற்றில் ரூ.55.38 கோடியில் உயா்மட்ட மேம்பாலம்: எம்எல்ஏ அடிக்கல்

187 மாணவா்களுக்கு ரூ.13.56 கோடி கல்விக் கடனுக்கு பரிந்துரை

SCROLL FOR NEXT