இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் சோ்த்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 253 ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தது. பின்னா் 143 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, 255 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இதையடுத்து, 399 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு தனது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, ஞாயிற்றுக்கிழமை முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் சோ்த்திருக்கிறது. ஜாக் கிராலி 29, ரெஹான் அகமது 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, பென் டக்கெட் 6 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் சோ்த்து அவுட் ஆனாா்.
இன்று தொடர்ந்து விளையாடி இங்கிலாந்து அணியால் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை.
அந்த அணி 292 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா, அஸ்வின் தலா 3, முகேஷ்குமார், குல்தீப் யாதவ், அக்ஸர் பட்டேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.