செய்திகள்

டெஸ்ட் தொடர் முழுவதும் விராட் கோலி விளையாட மாட்டாரா? என்ன சொல்கிறார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன்!

DIN

இங்கிலாந்துக்கு எதிராக அடுத்து நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பங்கேற்காதது இந்திய அணிக்கு மட்டுமின்றி உலக கிரிக்கெட்டுக்கும் மிகப் பெரிய இழப்பு என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி விளையாடவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக அடுத்து நடைபெறவுள்ள போட்டிகளிலும் விராட் கோலி விளையாடப் போவதில்லை என்ற தகவல் வலம் வருகிறது. அந்தத் தகவல் உண்மையா அல்லது வெறும் வதந்தியா என்பது மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டவுடன் தெரிய வரும். 

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக அடுத்து நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பங்கேற்காதது இந்திய அணிக்கு மட்டுமின்றி உலக கிரிக்கெட்டுக்கும் மிகப் பெரிய இழப்பு என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிராக அடுத்து நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாட மாட்டாரா என்பது இந்த தருணம் வரை உறுதி செய்யப்படாத தகவலாகவே உள்ளது. ஆனால், அவர் அடுத்து வரவுள்ள போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்று பேசப்படுகிறது. அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் விளையாடப் போவதில்லையா அல்லது மூன்று போட்டிகளிலும் விளையாடப் போவதில்லையா போன்ற தகவல்கள் இன்னும் உறுதியாகவில்லை.

அடுத்த சில மணி நேரங்களில் அடுத்தடுத்த போட்டிக்கான அணியை இந்தியா அறிவிக்க உள்ளது. விராட் கோலி அணியில் இடம்பெறவில்லையென்றால், அது இந்திய அணிக்கு மிகப் பெரிய இழப்பாக இருக்கும். இந்த டெஸ்ட் தொடருக்கும் மிகப் பெரிய இழப்பாக இருக்கும். அவர் அணியில் இல்லையெனில் உலக கிரிக்கெட்டுக்கும் அது மிகப் பெரிய இழப்பாக இருக்கும். இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் சிறப்பானதாக இருக்கப் போகிறது. முதல் இரண்டு போட்டிகள் சிறப்பானதாக அமைந்தது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ரூ.9 லட்சம் கோடி யாருடையது? அழிந்துபோன தரவுகள், மன்னிப்புக் கோரிய சிஇஓ!

100 முறை விடியோ பார்த்துவிட்டு பேட்டிங் ஆட சென்றாலும் ஆட்டமிழப்பேன்: ரோஹித்தை அச்சுறுத்திய பந்துவீச்சாளர் யார்?

சென்னை - திருப்பதி ரயில்கள் பகுதியளவு ரத்து!

8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT