செய்திகள்

ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் ஷமர் ஜோசப்: எந்த அணியில் தெரியுமா?

மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஷமர் ஜோசப் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக விளையாடவுள்ளார்.

DIN

மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஷமர் ஜோசப் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக விளையாடவுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி அண்மையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் தனது அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மேற்கிந்தியத் தீவுகளின் இளம் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஷமர் ஜோசப் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் ஷமர் ஜோசப் முதல் முறையாக விளையாடவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஷமர் ஜோசப்பை ரூ.3 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட்டுக்குப் பதிலாக ஷமர் ஜோசப் லக்னௌ அணியில் இணைந்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியைத் தேர்வு செய்வதில் ஷமர் ஜோசப் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக அண்மையில் மேற்கிந்தியத் தீவுகளின் பயிற்சியாளர் டேரன் சம்மி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

SCROLL FOR NEXT