செய்திகள்

உலகக் கோப்பைக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் இவர்தான்: ஜெய் ஷா

டி20 உலகக் கோப்பை வரை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தொடர்வார்.

DIN

டி20 உலகக் கோப்பை வரை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தொடர்வார் என பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு உலகக் கோப்பையுடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நிறைவடைந்தது. அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு அவர் இந்திய அணியுடன் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை வரை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தொடர்வார் என பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா பேசியதாவது: உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு நானும், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் சந்தித்துக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியில், அந்த வாய்ப்பு இன்று கிடைத்துள்ளது. ராகுல் டிராவிட் போன்ற அனுபவம் வாய்ந்த மூத்த வீரர் ஒருவரை தலைமைப் பயிற்சியாளராக தொடர ஏன் கவலைப்பட வேண்டும். அவர் வருகிற உலகக் கோப்பை டி20 தொடர் வரை இந்திய அணியின் பயிற்சியாளராக தொடர்வார் என்றார்.

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியை ரோஹித் சர்மா கேப்டனாக வழிநடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT