செய்திகள்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: முதலிடத்துக்கு முன்னேறிய நியூசிலாந்து!

உலக டெஸ்ட் சாம்பின்ஷிப் தரவரிசையில் நியூசிலாந்து முதலிடத்துக்கு முன்னேற்றம்.

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் நியூசிலாந்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

தென்னாப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 281 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அசத்தியுள்ளது நியூசிலாந்து. சிறப்பாக விளையாடிய கேன் வில்லியம்சன் 133* ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் நியூசிலாந்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

75 சதவிகித புள்ளிகளுடன் நியூசிலாந்து முதலிடத்திலும், 55 சதவிகித புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், 52.77 சதவிகித புள்ளிகளுடன் இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT