பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு ரசிகர்களால் மாபெரும் வரவேற்பை பெற்ற ஐபிஎல் தொடரைக் கொண்டாடும் விதமாக இத்தனை ஆண்டுகளாக விளையாடிய வீரர்களை வைத்து புதிய அணி ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த அணியைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான வாசிம் அக்ரம், மேத்யூ ஹைடன், டாம் மூடி மற்றும் டேல் ஸ்டெயின் ஆகியோர் இடம்பெற்றனர். அவர்களைத் தவிர்த்து கிட்டத்தட்ட 70 பத்திரிகையாளர்களும் இந்த அணியைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
ஐபிஎல் தொடரின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 16 பேர் கொண்ட அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், முன்னாள் இந்திய கேப்டனுமான மகேந்திர சிங் தோனி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
16 பேர் கொண்ட அணி விவரம்
எம்.எஸ்.தோனி (கேப்டன்), விராட் கோலி, கிறிஸ் கெயில், டேவிட் வார்னர், சுரேஷ் ரெய்னா, ஏபி டி வில்லியர்ஸ், சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, கிரன் பொல்லார்டு, ரஷித் கான், சுனில் நரைன், யுஸ்வேந்திர சஹால், லாசித் மலிங்கா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.
ஐபிஎல் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.