பென் ஸ்டோக்ஸ் 
செய்திகள்

ராஞ்சி ஆடுகளம் குறித்து பென் ஸ்டோக்ஸ் இப்படி கூறலாமா?

இந்தியாவுக்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள ராஞ்சி ஆடுகளத்தை பென் ஸ்டோக்ஸ் விமர்சித்துள்ளார்.

DIN

ராஞ்சியில் உள்ள ஆடுகளத்தைப் போன்று இதற்கு முன்பு ஒரு ஆடுகளத்தை பார்த்ததே இல்லை என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் 4-வது போட்டி நாளை (பிப்ரவரி 23) முதல் ராஞ்சியில் தொடங்குகிறது.

இந்த நிலையில், ராஞ்சியில் உள்ள ஆடுகளத்தைப் போன்று இதற்கு முன்பு ஒரு ஆடுகளத்தை பார்த்ததே இல்லை என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்த ஆடுகளம் பார்ப்பதற்கு சுவாரசியமானதாக இருக்கிறதல்லவா? இந்த ஆடுகளம் குறித்து எனக்குத் தெரியவில்லை. ஆடுகளம் தொடர்பாக அதிகமாகவும் என்னால் கூற முடியாது. இது போன்ற ஒரு ஆடுகளத்தை இதற்கு முன்பு நான் பார்த்ததே இல்லை. அதனால் போட்டியில் என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது என்றார்.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

SCROLL FOR NEXT