கோப்புப்படம் 
செய்திகள்

சர்வதேச டி20 போட்டிகளில் மேக்ஸ்வெல் புதிய சாதனை!

சர்வதேச டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

DIN

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை கிளன் மேக்ஸ்வெல் படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று (பிப்ரவரி 23) ஆக்லாந்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரையும் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.

இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் புதிய சாதனை ஒன்றைப் படைத்தார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இன்றையப் போட்டியில் அடித்த ஒரு சிக்ஸருடன் அவர் சர்வதேச டி20 போட்டிகளில் 126 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள்

கிளன் மேக்ஸ்வெல் - 126 சிக்ஸர்கள்

ஆரோன் ஃபின்ச் - 125 சிக்ஸர்கள்

டேவிட் வார்னர் - 113 சிக்ஸர்கள்

ஷேன் வாட்சன் - 83 சிக்ஸர்கள்

மிட்செல் மார்ஷ் - 66 சிக்ஸர்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT