செய்திகள்

டெஸ்ட் தொடரை வென்ற இந்தியா; குவியும் வாழ்த்துகள்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ராஞ்சியில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது.

இந்த நிலையில், டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு கிரிக்கெட் பிரபலங்கள் உள்பட பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சச்சின் டெண்டுல்கர்

இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அழுத்தமான சூழலில் இருந்து மீண்டு இந்திய அணி வெற்றி பெற்றது வீரர்களின் மன உறுதியை பிரதிபலிக்கிறது. ஆகாஷ் தீப் சிறப்பாக பந்துவீசினார். துருவ் ஜூரல் இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடினார். அவருக்கு உறுதுணையாக குல்தீப் யாதவ் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது மிக முக்கியானது. மூத்த வீரர்கள் தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கினர்.

ஜெய் ஷா

இந்திய அணி மிகச் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ராஞ்சியில் பெற்ற சிறப்பான வெற்றியினால் இந்திய அணி டெஸ்ட் தொடரையும் வென்றுள்ளது. இந்திய அணி சொந்த மண்ணில் 17-வது டெஸ்ட் தொடரை வெல்வதற்கு அணியை கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பாக வழிநடத்தினார்.

மைக்கேல் வாகன்

இந்திய அணியில் உலகத் தரத்திலான 5 வீரர்கள் இல்லை. இந்திய அணி டாஸ் வெற்றி பெறவில்லை. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தைக் காட்டிலும் இந்திய அணி குறைவான ரன்களையே சேர்த்தது. இருந்தும், மிகச் சிறப்பான வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளது. இதற்கு முழுமையான பாராட்டுகள் இந்தியாவையேச் சேரும். அணியில் புதிதாக விளையாடிய இளம் வீரர்கள் அதிக நேரம் களத்தில் நின்று சிறப்பாக விளையாடினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

SCROLL FOR NEXT