செய்திகள்

சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக சதம் விளாசி நமீபிய வீரர் சாதனை!

சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக சதமடித்து நமீபிய வீரர் சாதனை.

DIN

சர்வதேச டி20 போட்டிகளில் நமீபிய வீரர் ஜேன் நிக்கோல் லாஃப்ட்டீ ஈட்டன் அதிவேகமாக சதமடித்து சாதனை படைத்துள்ளார்.

நமீபியா, நேபாளம் மற்றும் நெதர்லாந்து ஆகிய மூன்று அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் இன்று (பிப்ரவரி 27) தொடங்கியது.

முதல் போட்டியில் நமீபியா மற்றும் நேபாளம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நமீபியா 20 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது. நமீபிய வீரர் லாஃப்ட்டீ ஈட்டன் 33 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக நமீபியாவுக்கு எதிராக நேபாள வீரர் குசல் மல்லா 34 பந்துகளில் சதமடித்ததே அதிவேக சதமாக இருந்தது.

நமீபிய வீரர் லாஃப்ட்டீ ஈட்டன் 36 பந்துகளில் 101 ரன்கள் (11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள்) எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு ரூ.5,000 அபராதம்

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

சட்டப்பேரவைத் தோ்தல் : களப்பணியை தீவிரப்படுத்துவோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திருத்துறைப்பூண்டியில் அனுமன் ஜெயந்தி விழா

SCROLL FOR NEXT