செய்திகள்

ஐபிஎல் தொடரில் விராட் கோலி விளையாடுவாரா?

விராட் கோலி ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.

DIN

விராட் கோலி ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில், விராட் கோலி ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ராஞ்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுனில் கவாஸ்கரிடம், நீண்ட நாட்களுக்குப் பிறகு கிரிக்கெட் விளையாடவுள்ளதால் ஐபிஎல் தொடரில் விராட் கோலி ரன் குவிப்பதில் தீவிரமாக இருப்பாரா என ஐஐடி மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.

மாணவர்களின் இந்த கேள்விக்கு சுனில் கவாஸ்கர் பதிலளித்ததாவது: அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? அவர் சில காரணங்களுக்காக கிரிக்கெட் விளையாடாமல் இருக்கிறார். அவர் ஐபிஎல் தொடரிலும் கூட விளையாடாமல் இருக்க வாய்ப்புள்ளது என்றார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய விராட் கோலி, அண்மையில் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT