செய்திகள்

தசைப்பிடிப்பால் தடுமாறினேன்...மனம் திறந்த கேமரூன் கிரீன்!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தசைப்பிடிப்புடன் பேட் செய்த ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன்.

DIN

தசைப்பிடிப்புடன் பேட்டிங் செய்ததாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று (பிப்ரவரி 29) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக 103 ரன்களுடன் கேமரூன் கிரீன் களத்தில் உள்ளார்.

இந்த நிலையில், தசைப்பிடிப்பு ஏற்பட்ட பிறகு பேட்டிங் செய்யத் தடுமாறியதாக ஆஸ்திரேலிய அணியின் கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆட்டத்தின்போது எனக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. நான் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தேன். மிட்செல் மார்ஷ் சிறப்பாக விளையாடினார். அவர் ரன்கள் குவிப்பதை எப்போதும் விரும்புபவர். ஆஸ்திரேலிய அணிக்கும் ரன்கள் தேவைப்பட்டன. மார்ஷ் குவித்த 40 ரன்கள் மிக முக்கியமானது. அவரது சிறப்பான ஆட்டத்தினால் தொடக்கத்தில் தடுமாறிய ஆஸ்திரேலிய அணி மீண்டும் ஆட்டத்துக்குள் வந்தது. அவர் அற்புதமாக விளையாடினார் என்றார்.

மிட்செல் மார்ஷ் 39 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

SCROLL FOR NEXT