செய்திகள்

தொப்பி கிடைத்துவிட்டது; மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட டேவிட் வார்னர்!

சில தினங்களுக்கு முன்னர் தொலைந்துபோன தனது பச்சை நிறத் தொப்பி கிடைத்துவிட்டதாக ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

DIN

சில தினங்களுக்கு முன்னர் தொலைந்துபோன தனது பச்சை நிறத் தொப்பி கிடைத்துவிட்டதாக ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் வார்னர் ஏற்கனவே அறிவித்திருந்தார். கடைசி டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பு தனது ராசியான பச்சை நிறத் தொப்பியைக் காணவில்லை எனவும், அதனை யார் எடுத்திருந்தாலும் என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன் எனவும் விடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார் டேவிட் வார்னர். 

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் தொலைந்துபோன தனது பச்சை நிறத் தொப்பி கிடைத்துவிட்டதாக ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். எனது பாரம் குறைந்தது போல் உணர்கிறேன். மதிப்புமிக்க என்னுடைய பச்சை நிறத் தொப்பி கிடைத்துவிட்டது. அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் அந்த தொப்பி எவ்வளவு முக்கியமானது என்பது தெரியும். எனது மீதமுள்ள வாழ்நாளில் இந்த தொப்பியை வைத்து பெருமை கொள்வேன். கடந்த இரண்டு நாள்களாக நான் இதை நினைத்து மிகுந்த வருத்தத்தில் இருந்தேன். எனது தொப்பியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். அவர்களை நான் பாராட்டுகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யு19 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபாரம்!

இந்தியத் தயாரிப்பு பொருள்களுக்கு உயா் தரத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: மோடி வலியுறுத்தல்

ரோஹித் சர்மா, ஹர்மன்பிரீத் கௌருக்கு பத்ம ஸ்ரீ விருது!

வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு - புகைப்படங்கள்

நடிகர் மம்மூட்டி பத்ம பூஷண், மாதவனுக்கு பத்ம ஸ்ரீ!

SCROLL FOR NEXT