செய்திகள்

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் தேர்வு செய்யப்பட்டால்... என்ன சொல்கிறார் ஜானி பேர்ஸ்டோ!

DIN

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை இந்தியா தேர்வு செய்தால், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களின் பலத்தை அது பாதிக்கும் என இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோ தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜனவரி 25 முதல் தொடங்க உள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை இந்தியா தேர்வு செய்தால், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களின் பலத்தை பாதிக்கும் என இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோ தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியா வெவ்வேறு தன்மையுள்ள ஆடுகளங்களை தேர்ந்தெடுக்க முடியும். அந்த ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு உகந்தவையாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் அண்மைக் காலங்களில் மிகச் சிறப்பாக செயல்படுவதை பார்க்க முடிகிறது. எந்த ஆடுகளமானாலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானதாக இருக்கும் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானதாக இருந்தால், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களின் பலம் பாதிக்கப்படும். அவர்கள எவ்வளவு பலம் வாய்ந்தவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

SCROLL FOR NEXT