செய்திகள்

விராட் கோலியின் கோபத்திற்கு நான் மிகப் பெரிய ரசிகன்: இந்திய வம்சாவளி வீரர்

விராட் கோலியின் ஆக்ரோஷத்திற்கு தான் மிகப் பெரிய ரசிகர் என பிக் பாஷ் லீக் கிரிக்கெட் வீரர் நிகில் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

DIN

விராட் கோலியின் ஆக்ரோஷத்திற்கு தான் மிகப் பெரிய ரசிகர் என பிக் பாஷ்  லீக் கிரிக்கெட் வீரர் நிகில் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

பிக் பாஷ்  லீக்கில் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்காக நிகில் சௌத்ரி விளையாடி வருகிறார். அண்மையில் மெல்பர்னுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, விராட் கோலியின் ஆக்ரோஷத்திற்கு தான் மிகப் பெரிய ரசிகர் என நிகில் சௌத்ரி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக மெல்பர்னுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு நிகில் சௌத்ரி பேசியதாவது: விராட் கோலியின் ஆக்ரோஷத்திற்கு நான் மிகப் பெரிய ரசிகன். அவரது விளையாட்டுத் திறமைக்கும் நான் பெரிய ரசிகன். அவர் ஒரு மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர். கடந்த 10 ஆண்டுகளாக அவரை பின் தொடர்கிறேன். அவர் கிரிக்கெட்டில் வளர்கிறார், வளர்கிறார், வளர்ந்துகொண்டே இருக்கிறார் என்றார். 

பிக் பாஷ்  லீக்கில் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்காக விளையாடும் நிகில் சௌத்ரி இந்திய வம்சாவளி வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT