செய்திகள்

ஜடேஜாவை விட அக்சர் படேல் திறமையானவர்: பார்த்திவ் படேல்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்திவ் படேல், அக்சர் படேல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

DIN

.இந்திய தீவுகள், அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம்  டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் டி20 தொடா்களில் ஆடி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையில் 3 ஆட்டங்கள் கொண்ட தொடா் நடைபெற்று வருகிறது. இதில், இரண்டு ஆட்டங்களை வென்று இந்திய அணி தொடரைக் கைபற்றியுள்ளது.

பார்த்திவ் படேல்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பார்த்திவ் படேல், “ டி20 போட்டிகளில் அக்‌ஷர் படேல் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர். குறிப்பாக, எந்த ஆட்டத்தில் எப்படி பந்து வீசுவார் என்பதைக் கணிக்க முடியாது. அவர் அதிரடி பேட்ஸ்மேனாகவும் இருப்பதால் டி20 போட்டிக்கு உகந்தவர். இந்த விதத்தில் ரவீந்திர ஜடேஜாவை விட சிறப்பான வீரர் அக்சர் படேல்தான்” எனக் கூறியுள்ளார்.

அக்சர் படேல்.

 இந்திய அணியின் நம்.1 ஆல்ரவுண்டராகக் கருதப்படும் ரவிந்திர ஜடேஜா குறித்த பார்த்திவ் படேலின் கருத்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

எஸ்400 வான்பாதுகாப்பு அமைப்பை கூடுதலாக வாங்க இந்தியா - ரஷியா பேச்சுவார்த்தை!

யுஜிசி பாடத்திட்டத்தை கண்டித்து மன்னா் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் நகல் எரிப்பு போராட்டம்

புதிய உச்சத்தில் தங்கம் விலை: பவுன் ரூ.79,000-ஐ நெருங்குகிறது!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி!

SCROLL FOR NEXT