செய்திகள்

உலக சாம்பியனை வீழ்த்திய பிரக்ஞானந்தா! 

நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், தமிழக வீரர் பிரக்ஞானந்தா அபார வெற்றிபெற்றார்.

DIN

நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், தமிழக வீரர் பிரக்ஞானந்தா அபார வெற்றிபெற்றார்.

உலக சாம்பியனான சீனாவைச் சேர்ந்த வீரர் ஜிஎம் டிங் லிரனை தோற்கடித்ததன் மூலம்,  விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் நடப்பு உலக சாம்பியனை தோற்கடித்த 2-வது இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார்.

ஃபிடே தரவரிசை பட்டியலில் விஸ்வநாதன் ஆனந்த் 2748 புள்ளுகளுடனும், பிரக்ஞானந்தா 2748.3 புள்ளிகளுடனும் உள்ளனர்.  இதன் மூலம் இந்திய செஸ் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் பிரக்ஞானந்தா.

பிரக்ஞானந்தா கடந்த 2018 ஆம் ஆண்டு அவரது 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT