செய்திகள்

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவது அழுத்தத்தை கொடுக்கிறது: நிக்கோலஸ் பூரன்

மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்காக விளையாடுவது மிகவும் அழுத்தத்தைக் கொடுப்பதாக அந்த அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.

DIN

மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்காக விளையாடுவது மிகவும் அழுத்தத்தைக் கொடுப்பதாக அந்த அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச லீக் டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (ஜனவரி 19)  முதல் தொடங்குகிறது. 6 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்காக விளையாடுவது மிகவும் அழுத்தத்தைக் கொடுப்பதாக அந்த அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவது சிறப்பான அனுபவம். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் டி20 கிரிக்கெட்டில் இருக்கிறார்கள். டி20 லீக் போட்டிகளில் சிறந்த அணிகளில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணி விளங்குகிறது. சவாலை ஏற்றுக் கொள்வது என்பதுதான் முக்கியமானது. ஒரு அணியாக எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுவோம். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவது எப்போதுமே ஒரு விதமான அழுத்தத்தை ஏற்படுத்தும். இருப்பினும், இது போன்ற அழுத்தமான சூழல் வீரர்கள் சவால்களை ஏற்று சிறப்பாக செயல்பட உதவுகிறது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த தமிழன்..! 20 போட்டிகளில் சாதித்த வருண் சக்கரவர்த்தி!

அசிஸ்டென்ட் மெடிக்கல் ஆபீஸர் பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி

ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு!

SCROLL FOR NEXT