செய்திகள்

முதல் தர கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களைக் கடந்து புஜாரா சாதனை!

முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களைக் கடந்த  4-வது இந்திய வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் புஜாரா படைத்துள்ளார்.

DIN

முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களைக் கடந்த  4-வது இந்திய வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் புஜாரா படைத்துள்ளார்.

ரஞ்சிப் போட்டியில் விதர்பா மற்றும் சௌராஷ்டிரா அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது புஜாரா இந்த சாதனையைப் படைத்தார். ரஞ்சிக் கோப்பையில் விதர்பா மற்றும் சௌராஷ்டிரா அணிகளுக்கிடையில் நேற்று முன் தினம் (ஜனவரி 19) தொடங்கிய போட்டி இன்று நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் சௌராஷ்டிரா 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்தப் போட்டியில் சௌராஷ்டிர அணிக்காக விளையாடிய புஜாரா முதல் இன்னிங்ஸில் 43 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 66 ரன்களும் எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 66 ரன்கள் எடுத்ததன் மூலம் புதிய சாதனை ஒன்றையும் அவர் படைத்துள்ளார். முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களைக் கடந்த 4-வது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். 

இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியிடம் பேசினேன்! வணிகத்தை நிறுத்துவதாக எச்சரித்தேன்! மீண்டும் Trump

மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

நெல்லையில் செப். 7 வாக்குத் திருட்டு விளக்க மாநாடு! பிரியங்கா பங்கேற்பு?

15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!

SCROLL FOR NEXT