செய்திகள்

சுழலில் தடுமாறிய இங்கிலாந்து: முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

DIN

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று (ஜனவரி 25) ஹைதராபாத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக பேர்ஸ்டோ 37 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அக்‌ஷர் படேல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டுமே 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயன்பாட்டிற்கு வந்தது கரூர் புதிய பேருந்து நிலையம்

வரும் தீபாவளிப் பண்டிகை எப்படி இருக்கும்? 2011க்குப் பிறகு முதல் முறை!

மாரி செல்வராஜ் சம்பவம் பண்ணிருக்காரு: துருவ் விக்ரம்

பிரசவத்தின்போது பெண் பலி: உ.பி.யில் தனியார் மருத்துவமனைக்குச் சீல்!

உத்தரவு பிறப்பிக்கும் நீதிபதியையும் விட்டுவைக்காமல் விமர்சனம்! நீதிபதி செந்தில்குமார்

SCROLL FOR NEXT