செய்திகள்

பென் ஸ்டோக்ஸை 12வது முறையாக விக்கெட் எடுத்த அஸ்வின்! 

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி வருகிறார். 

DIN

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 ஆட்டங்கள் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் ஹைதராபாதில் வியாழக்கிழமை தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தோ்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவா்களில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து. அடுத்து ஆடிய இந்தியா 436 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜடேஜா 87, கே.எல்.ராகுல் 86, ஜெய்ஸ்வால் 80, அக்‌ஷர் 44 என அசத்தினார்கள்.

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து தனது பேஸ்பால் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 70 ரன்கள் அடித்த பென் ஸ்டோக்ஸ் 2வது இன்னிங்ஸில் அஸ்வின் ஓவரில் போல்ட்டானார். ஸ்டோக்ஸ் விக்கெட்டினை எடுத்தப்பிறகு அஸ்வின் ஆக்ரோஷமாக கொண்டாடினார். 

இந்த விக்கெட்டின்மூலம் அஸ்வின் பென் ஸ்டோக்ஸை டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 முறை ஆட்டமிழக்க செய்துள்ளார். இதுவரை விளையாடிய போட்டிகளில் அஸ்வினுக்கு எதிராக ஸ்டோக்ஸ் 624 பந்துகளில் 232 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 19.3 ஆகும். இதில் 12 முறை ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. 

ஸ்டோக்ஸ் விக்கெட் எடுத்த வெற்றிக் களிப்பில் அஸ்வின்.

ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்களான ஸ்மித், லபுஷேன் விக்கெட்டுகளையும் எடுப்பதில் அஸ்வின் கில்லாடி. இன்னும் அஸ்வினுக்கு 500 விக்கெட்டுகள் எடுக்க 5 விக்கெட்டுகள் தேவைப்பட்டுகிறது. இன்றைய போட்டியில் தவறினால் நிச்சயமாக அடுத்தப் போட்டியில் கைப்பற்றிவிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.  

இங்கிலாந்து அணி 3ஆம் நாளில் 64 ஓவர் முடிவில் 262/5 ரன்கள் எடுத்துள்ளது. ஒல்லி போப் 114*, பென் போக்ஸ் 32* ரன்களுடன் விளையாடி வருகிறார்கள். இத்துடன் இந்தியாவைவிட 71 ரன்கள் முன்னிலையில் உள்ளது இங்கிலாந்து அணி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

பிகார் வாக்குரிமைப் பேரணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! | செய்திகள்: சில வரிகளில் | 27.08.25

சூரியின் மண்டாடி சிறப்பு போஸ்டர் வெளியீடு!

ஜம்மு - காஷ்மீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக் கொன்ற தலைமைக் காவலர் கைது!

SCROLL FOR NEXT