இங்கிலாந்து அணிக்காக அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் டாம் ஹார்ட்லி இணைந்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய டாம் ஹார்ட்லி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் அவர் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இங்கிலாந்தின் வெற்றிக்கு உதவினார்.
இதையும் படிக்க: 25 ஆண்டுகளுக்குப் பிறகு சமனில் முடிந்த டெஸ்ட் தொடர்; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மே.இ.தீவுகள் முன்னேற்றம்!
இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் இங்கிலாந்து அணிக்காக அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் டாம் ஹார்ட்லி இணைந்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக அறிமுக டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் (இந்த நூற்றாண்டில்)
அடில் ரஷீத் - 5/64 - பாகிஸ்தானுக்கு எதிராக, 2015
வில் ஜாக்ஸ் - 6/161 - பாகிஸ்தானுக்கு எதிராக, 2022
ரீகன் அகமது - 5/48 - பாகிஸ்தானுக்கு எதிராக, 2022
டாம் ஹார்ட்லி - 7/62 - இந்தியாவுக்கு எதிராக, 2024
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.